Thursday, 18 May 2017

நவீன காதல்!

நவீன காதல்
நொடி பொழுதும்
இரு மனங்கள் பிரியாத
காதல் இது !

பெற்றோரும்,உற்றோரும்,மற்றோரும்
சேர்த்து வைக்கும்
காதல் இது!

அஃறிணை காதல் என்றாலும்
அகிலத்தை ஆளும்
காதல் இது!

கண்ணாடி பார்க்கும் நேரத்திலும்
கழிவறை நேரத்திலும் விட்டு விலகாத
விசித்திர காதல் இது..!

முப்பொழுதும் கரங்களுக்கு
நாட்டியம் சொல்லித்தரும்
கவலையில்ல காதல் இது..!

அவளுள் அவன் தன்னையே
தொலைத்து கொண்டும் வாழும்
காதல் இது..!

அவனுக்காக அவள்
இமைப்பொழுதும் தூங்காத
உன்னத காதல் இது..!

அவளால் அவன் செவிகளுக்கு
100 முத்தங்கள், தினம் கொடுக்கும்
முத்தான காதல் இது..!

உறவுகளை மறந்து போய்
உலகம் அவளென புரிந்துகொண்ட
காதல் இது...!

அவள் விழிகளில் மட்டுமே
தன் முகம் பார்க்கும்
வினோத காதல் இது..!

பட்டறிவாளர்களும்,படிப்பறிவாளர்களும்
பாமரரும் செய்யும்
காதல் இது...!

இசை மொழி மட்டுமே
அறிந்த இரண்டு இதயங்கள்
கரைந்து போகும் காதல் இது..!

இன்றைய காளையர்களின்
கைபேசி
காதல் இது...!


கோவை.சரவண பிரகாஷ்

Wednesday, 17 May 2017

ஒரு கொலை செய்யுங்கள் !



என்றாவது கொலை  செய்வதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா?நெஞ்சம் படபடக்காமல்,கைகள் தளர்ந்து போகாமல் கத்தியின்றி,ரத்தமின்றி ஒரு கொலை   செய்யும் கலையை உங்களுக்கு சொல்லித்தரப்போகிறேன்.

தினம் தினம் கண்ணனுக்கு தெரிந்த மனிதர்கள் பலரை கொலை  செய்ய வேண்டும் என உங்கள் மனம் குழம்பி இருக்கலாம்.உங்களோடு வாழ்கின்ற கண்ணனுக்கு தெரியாத ஒருவனை நீங்கள் கொலை செய்ய வேண்டும்.

அதிசயம் என்னவென்றால் இந்த செயலுக்கு சட்ட அத்தியாயங்களில் தண்டனைகள் குறிப்பிடவில்லை,மாறாக உலகம் உங்களுக்கு பூமாலை சூடலாம்.அந்த "ஒருவனை" அறிந்துகொள்ள வேண்டுமெனில் என் கடைசி வரிகளுக்காக நீங்கள் காத்திருக்க வேண்டும்.

மனிதா!நீ எச்சில் செய்த தேநீர் ஆறி போவதற்குள் உன்னோடு சில சூடான விவாதங்கள் செய்ய எத்தனிக்கிறேன்.

உலக வாழ்க்கை என்னும் புத்தகத்தில் பிறப்பு,வாழ்வு,இறப்பு என்பவை சொல்லப்படாத சூத்திரங்களக இருக்கும் பொழுது,வரலாற்று புத்தகத்தில் வெகுசிலரே இடம் பிடிக்க முடிகிறது.இங்கே சிலரின்  கனவுகள் மட்டுமே நிஜமாகிறது,பல கனவுகள் நினைவாகின்றன!

அச்சம்,நாணம்,தோல்வி,குடும்ப சூழல்,சமுதாயம் இவற்றுள் ஒன்று மேலேகுறிப்பிட்டதற்கு நிச்சயக்கரணமாக இருக்கலாம்.

எப்போது எங்கயோ தோற்று விட்டோம் என்பதற்காக இப்போது முகம் தெரியாத தோல்விகளிடம் தினம் தினம் தோற்று கொண்டு பத்தோடு பதினொன்றாக வாழ்வதில் அர்த்தம் என்ன?

இந்த உலக வட்டத்தையே வெற்றி கொள்ள பிறந்தவர்கள் நீங்கள்,குறிகிய வட்டத்திற்குள் உங்களை நீங்களே ஏன் சுருக்கி கொண்டீர்கள்?

வரலாறு உங்கள்  பெயரை குறிப்பெடுக்க காத்திருக்கிறது,ஆனால் நீங்கள் இன்னும் கவலைகளிடம் மண்டியிட்டு கொண்டிருக்கிறீர்கள் என்பது தான் என் ஆதங்கம்.

பூமாலைகள் கிடைப்பதற்கு தாமதமாகிற வேளையில்  கல்லாலான மாலையை ஏற்றுக்கொளவது  எப்படி சரியாகும்?

நாளைய உலகின் வழிகாட்டி நீ,வலுவிழந்து கிடக்கிறாய்!

போராளி நீ,போருக்கு பயந்து பொய் கிடக்கிறாய் ?

சூரியனே !உன்னை பாய் என்று உலகம் சொன்னதால் நீ சுருண்டு போய் கிடக்கிறாய்!

உலகத்தின் பழிச்சொல்லுக்கு செவிசாய்த்து,உன்  கனவுகளை மறுதலித்து  போயிருக்கிறாய்!

உன்னை எழ விடமால் சமுதாயம் உன் கால்களை முடமாகியதால்,நான்கு சுவற்றுக்குள் நீ நலிவடைந்து போயிருக்கிறாய்!


இப்போதைய நீ,நீ இல்லை .அது உலகத்தின் சாதாரண மனித பிம்பம்.நீ ஆள்வதற்காக படைக்க பட்டவன்,அழுவதற்காக  அல்ல..!

உனக்குள் இந்த பிரபஞ்சமே அடங்கும்,ஒற்றை உலகத்திற்கு உன்னை மொத்த பலம் எப்படி தெரியும்...!

குருட்டு உலகத்தின் நியாயமில்லா வார்த்தைகளுக்கு நீ செவிடனாகா மாறிருக்கவேண்டும்!

இனியேனும் துயில் களை,இயற்கையின் எந்த படைப்பும் வீணாக போவதில்லை,நீ மட்டும் அதற்கு விதிவிலக்கா?கைவிட்ட கனவுகளை மறுமணம் செய்து கொள்.காலம் ஒருநாள் உன் பெயரை உச்சரிக்கும்!

இந்த இயற்கை   உனக்கென அழகிய உலகத்தினை படைத்திருக்கிறது,நீ தான் உன் கண்களை மூடி கொண்டிருக்கிறாய்!இமைகளையும்,இதயத்தையும் ஒருசேர திற,வசந்தங்களின் வாசல்கள் உங்களுக்காக திறக்கப்படும்!

அன்று தேவதைகள் உங்கள்   மேல் பூமாரி பொலிந்து புதிய உலகத்திற்கு வரவேற்கும்.அதற்காக உங்களிடம் நீங்கள் சில மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும்.கவலை,தாழ்வுமனப்பான்மை,துரோகம்,காயம்,கண்ணீர் ஆகியவற்றால் நீங்கள் கட்டுண்டுகிட க்கிறீர்கள்.

நம்பிக்கையின்மை என்ற சாத்தான் உங்களுள் சென்று உங்களை ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறது.அந்த சாத்தானை உங்கள் மனபலத்தால் கொன்றுவிடுங்கள்.அவனை கொலை செய்து விடுங்கள்.பிறகு உண்மையான நீங்கள் உங்களிடமிருந்து தோன்றுவீர்கள்.அந்த நொடியிலிருந்து வாழ்க்கை அர்த்தப்படும்....!


கோவை.சரவண பிரகாஷ்.

Monday, 15 May 2017

மன்னிப்புக் கேட்கிறேன் மனசாட்சியே!


மனிதம்,இறைமை,மிருகம் ஆகிய மூன்று நிலைகளுக்கு இடையில் இருந்து நான் எழுதுகிறேன்.இந்த அகிலத்தில் பலருக்கும் வாழப்பிடிக்கிறது,ஆனால் சிலருக்கு மட்டுமே நல்வாழ்வு அமைகிறது.

    வாழ்வின் இலையுதிர்காலத்தையும்,வசந்தகாலத்தையும் சம அளவில் அனுபவிக்கும் நவீன சமுதாய மனிதர்களே,கண்ணனுக்கு தெரியாத சில மனிதர்களின் வாழ்வியல் பற்றி உங்களோட கொஞ்ச நேரம் பேசிடவே என் எழுத்துக்கள் இங்கே பிரசவிக்கிறேன்.

     நவீன மானுடக் கடலில் உங்களுள் நானும் ஒரு துளி என்பதை இப்போதே உறுதி படுத்திக்கொள்கிறேன்.
    பல இரவுகள் என் தலையணையை நான் காலங்கப்படுத்தி இருக்கிறேன்,அவையனைத்தும் என் மீது நான் கொண்ட எண்ணங்களின் தாக்கம். இப்போது,மனிதர்களின் வார்த்தைகள் மௌன்னித்து போய் இருக்கின்ற இந்த நீள இரவில் என் கண்ணீர் மொழிக்கு காரணம் அவர்கள் தான்.

       இப்போதும் கூட நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நொடி பொழுதில் கூட எங்கோ ஒரு மூலையில் சில இதயங்கள் அழுது கொண்டிருக்கும்,பேருந்து நிலையங்களில் சில கண்கள் கதறி அழுது கொண்டிருக்கும்,சில வயுறுகளை உணவுகள் நிராகரித்திருக்கும்,சிலரின் உணர்வுகள் காலம் தன் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கும்,வறுமையின் பிடியில் சிக்கி தவிப்போர் பலருண்டு,அவர்களுக்காக தான் என் இதயமும் கண்களும் ஒருசேர கலங்குகிறது!

   ப்ரியத்திற்குரியவர்களே!நீங்கள் வீட்டை விட்டு வந்த பின்பு ,வீடில்லாமல் தெருவில் கிடைக்கும் முதியவர்களை என்றாவது ஒருநாள் உங்கள் கவனத்தை ஈர்த்ததுண்டா?பிஞ்சு கைகள் உங்கள் கைகளை நோக்கும் போது உங்கள் இதயத்தின் சில நரம்புகள் அருந்ததை உணர்ந்ததுண்டா?

  உங்கள் வாழ்வின் ஒருமுறையாவது அவர்கள் வாழ்க்கை பின்னோட்டத்தை அறிய முற்பட்டதுண்டா ?
என்னை மன்னித்து விடுங்கள் நண்பர்களே!இந்த உலகில் நீங்களும் நானும் கைதேர்ந்த நடிகர்களாக துடிக்கிறோம்,மனிதனாகும் முயற்சியை மறுதலித்துவிட்டு...!

              அந்த பேருந்து நிலையத்தில் இரண்டு பிஞ்சு கரங்கள் என் கால்களை தீண்டிய போது அக்கரங்களுக்கு என் இதயம் அளித்த பரிசுகள் இரண்டு சொட்டு கண்ணீர் துளிகள் தாம்!ஒரு கங்கையை வெற்றி கொள்ள போனவன் அன்று காய்ந்து போய் வந்தேன் !
                     
                                ஆயிரம் மேடைகள் அரவணைத்தாலும்,உதடுகள் புகழ்ந்தாலும்,புகழ் என்னும் போதை உச்சிக்கு ஏறினாலும் அவையாவும் பொய்யென அறிந்துகொண்டேன் இல்லாதவர்களுக்கு "இல்லை" என உரைத்திடும் போது .

                           "சொல் பித்தளை,செயல் தங்கம்" நீங்களும் நானும் தங்கமாகப் படைக்கப்பட்டவர்கள்,ஏன் பித்தளையாக மாறிப்போனோம்!

                         இந்த உலகத்தில் "நல்லவன்" என்று முயற்சிக்கிறோம் நல்லவனா வாழ்வதற்கு முயற்சிசெய்யவில்லை.
       
                இந்த உலகத்தின் பாஷையில் "சாதனை" என்பதும்,"பெருமை" என்பது தவறாக மொழிபெயர்க்கப்பட்டது என நினைக்கிறன்.வாடிப் போன உதடுகளை சிரிக்க செய்வது சாதனை.உங்களால் ஒருவனுக்கு வாழ்வு கிடைத்தது என்பது பெருமை.சாதனைகளுக்கும்,பெருமைகளும் விளம்பரங்கள் தேவை இல்லை.

               இதயத்தின் ஈர பிரதேசத்தில் அன்பு இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறது.அந்த அன்பினை சுவாசிப்போம்.எல்லோருடைய இதயங்களையும் அன்பினால் வெல்வோம்.அன்பை பரிசளிப்போம்.அன்பை வார்த்தெடுப்போம்.அன்பை மிஞ்சிய சக்தி ஏதும் இல்லை.உங்களையும் என்னையும் பிணைத்திருப்பது கூட அன்பு தான்.சில விசயங்கள் சில்லறைகள்,சத்தம்போடும்.உயர்ந்த கோபுரங்கள் மௌனித்திருக்கும்.அன்பு ஒருபோதும் சத்தம் போடுவதில்லை.

                    நீங்களும் நானும் இப்பொது அன்பின் மொழி மறந்து போனோம்.பேசிய பேச்சுக்கள் சுயநலமிக்கவை என பிஞ்சு குழந்தைகளிம் வாடிய முகம் கண்டு கண்டுகொண்டேன்.அந்த பேருந்து நிலையம் தான் என்னை புத்தனாகிய போதிமரம்.
       
                   என்னை மன்னித்துவிடு மனசாட்சியே!புகழ்,ஆளுமை என்னும் போலிக்கு பின்னல் சென்றுகொண்டிருந்த வேளையில் மனிதத்தை மறந்துபோனேன்,சகோதரர்களுக்கு உதவ இயலாத
 திக்கற்றவன் ஆனேன்,பெருமை    பேசி கொள்ளும் அர்ப்பன் ஆனேன்,என்னை மன்னித்துவிடு மனசாட்சியே!

விதியே!இன்னொரு பிறவி எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தால் அவர்களின் வாழ்க்கையை எனக்கு கொடுத்துவிட்டு,வசந்தங்களை அவர்களுக்கு கொடு.நான் வேண்டி கிட (டை)ப்பதும், வேண்ட முடிந்ததும் இதுதான்...!



கோவை.சரவண பிரகாஷ்.



Image result for varumai