கலங்காதிரு நன்னெஞ்சே!
*********************************************************************
சொல்லி அழ யாருமின்றி,உன் வார்த்தைகள் தவித்தாலும்
யாருமில்லா தனிமை உன்னை விட்டு விலக மறுத்தாலும்
இன்னும் நீ கடக்க வேண்டிய தூரம் நின் கண்ணெதிரே உண்டு
அதுவரை கலங்காதிரு நன்னெஞ்சே...!
உற்றார்,உறவினர் யார் தடுத்தாலும்,உயிராய் நினைத்த
நண்பர்கள் உன்னை பிரிந்தாலும்,சோக காட்டில் உன்
சுவடுகள் பதிந்தாலும்,சரித்திர நாயகன் நீயென
உலகம் பேசும்வரை கலங்காதிரு நன்னெஞ்சே....!
வற்றாத கவலை கடலலைகள் உன் மனபிரேதேசத்தில் சூழ்ந்தாலும்
துரோகம்,சூழ்ச்சி,கயமை இவைகளால் நீ சூழப்பட்டாலும்
நாளெல்லாம் கண்ணீரில் நீ கரைந்து போனாலும்,கடமைகள்
காத்திருக்கிறது அதற்காகவேனும் கலங்காதிரு நன்னெஞ்சே...!
எத்தனை நாக்குகள் உன்னை கீறிச்சென்றாலும்,உன்னவரே
உன்னை நிந்தனை செய்தாலும்,அணையாத சோகத் தீ
உன்னை கொஞ்சம் கொஞ்சமா சுட்டெரித்தாலும்,உந்தன் புகழொளி
ஒருநாள் சுடர்விட்டெரியும்,அதுவரையில் கலங்காதிரு நன்னெஞ்சே...!
புரிந்தவர்கள் பிரிந்து சென்றாலும்,பிரிந்தவர்கள் புரிந்து கொன்றாலும்
உனக்குரியவர்களே உன் உயிர் பிழிந்தாலும்,நினைவுகளால் நித்தம் நீ
கைதாகிறபோதும்,புது விடியல் ஒன்று உனக்காய் காத்திருக்கும்
அதுவரையேனும் நீ கலங்காதிரு நன்னெஞ்சே.....!
கோவை.சரவண பிரகாஷ்.

No comments:
Post a Comment